இந்தியா

பெற்ற குழந்தையை வீடியோ அழைப்பில் மட்டுமே பார்த்து வந்த பெண் மருத்துவர்! முதல்முறையாக கையில் ஏந்திய நெகிழ்ச்சி வீடியோ

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டு தான் பெற்ற குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்திய பெண் மருத்துவரின் நெகிழ வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கம் ஹவுராவைச் சேர்ந்தவர் அர்பா சஜாதின் (25). பெண் மருத்துவரான அர்பா 37 வார கர்ப்பிணியாக இருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அவருடைய நிலைமை மோசமாக இருந்ததால் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தையைப் பரிசோதித்ததில் அதற்கு நெகட்டிவ் வந்த போதும் தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்டது.

குழந்தை பெற்ற மூன்று நாட்களுக்கு பின்னர் அர்பாவின் உடல்நிலை மோசமாகி ஆக்சிஜன் அளவு இறங்கியது. பின்னர் வெண்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து அர்பா மீண்டார். இந்த இடைப்பட்ட 10 நாட்களில் தனது குழந்தையை வீடியோ அழைப்பின் மூலம் அவர் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் முழுவதும் குணமான பின்னர் தனது குழந்தையை ஆனந்த கண்ணீருடன் கையில் ஏந்தி கொஞ்சினார் அர்பா. இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Related posts

திருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்! கணவனே கொன்றது அம்பலம்.. பகீர் பின்னணி

அம்மு

நான் கூப்பிடும் போதெல்லாம் வரனும்… தொண்டரின் மனைவியிடம் சத்தியம் வாங்கிய கவுன்சிலர்! அதன் பின் நடந்த சம்பவம்

அம்மு

கொலை செய்ய 5500 ஆயிரம்… அடித்து காயப்படுத்த 5000 ஆயிரம்! கூலிப்படையின் விளம்பரத்தால் மக்கள் அதிர்ச்சி

அம்மு