வாழ்க்கைமுறை

இளநரை ஏற்படக்காரணமும்.. வராமல் தடுக்கும் வழிமுறைகளும் என்னென்ன?

இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்கி விட்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். உண்மையில் இளநரை ஏற்படக்காரணுமும் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்வோம்.

வைட்டமின் பி 12 சத்துக்குறைபாடு, இளநரை ஏற்பட மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வைட்டமின் பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஆகையால் உணவில் இந்த சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம் தைராய்டு ஹார்மோன்களின் பிரச்சனை ஏற்பட்டால் அது இளமையிலேயே தலைமுடி நரைக்க ஒரு காரணமாக அமைகிறது.

பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளை கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மேலும், முடி பராமரிப்பு பொருள்களாக லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் இளநரை ஏற்படலாம். கலரிங், பிளீச்சிங் மற்றும் ரசாயனப்பொருள்கள் நிறைந்த ஷாம்புக்களை அடிக்கடி தலையில் தேய்த்து குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம்.

எனவே முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும் மன அழுத்தத்துக்கு நோ சொல்லுங்க. மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

தடுக்கும் வழிமுறைகள்

இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காயவைத்த பொடியாக்கி கலரிங் செய்ய பயன்படுத்தலாம். கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.

இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வரலாம். கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது, கறிவேப்பிலையில் டீ தயாரித்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது நல்லது.

Related posts

சக வீரரின் மனைவி மற்றும் சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்! புகைப்படத்துடன்

அம்மு

வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் இந்த அற்புத பலன்கள் கிடைக்குமாம்! மறக்கமால் சாப்பிடுங்க

அம்மு

வெங்காயத் தோலை தூக்கி வீசாதீங்க… இப்படி கூட பயன்படுத்தலாம்!

அம்மு