உலகம்

கன்னத்தில் பளார்… டி.வி நேரலையில் மோதிக்கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள்: வைரலாகும் வீடியோ

 டி.வி நேரலை விவாதத்தில் பாகிஸ்தான் அரசியில் தலைவர்களில் தகாத வார்தையில் ஒருவரை ஒருவர் திட்டி கைகலப்பில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் டி.வி சேனலில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் ‘ஊழல்’ தலைப்பில் பாகிஸ்தானை ஆளும் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சியின் மூத்த உறுப்பினர் Firdous Ashiq Awan மற்றும் Pakistan People கட்சியைச் (PPP) சேர்ந்த Qadir Khan Mandokhel ஆகியோர் விவாதித்தனர்.

விவாதத்தின் போது வாக்குவாதம் முற்ற, அரங்கத்திலே இருவரும் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் சரமாரியாக தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டனர்.

சில நொடிகளில் Awan, Mandokhel-யின் காலரை பிடித்து கன்னத்தில் அறைந்தார். உடனே Mandokhel, Awan-ஐ தள்ளிவிட்டார்.

உடனே அரங்கத்தில் இருந்த நபர்கள் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினர். நேரலையில் இரு அரசியல் தலைவர்கள் மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இச்சம்பவத்தை தொடர்ந்து Awan தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், விவாதத்தின் போது Mandokhel என்னை மிரட்டினார். மறைந்த எனது தந்தையும் என்னையும் அவமரியாதையாக பேசினார்.

எனவே என்னை தற்காத்துக்கொள்ள அவரை தாக்கிய வேண்டிய நிலை ஏற்பட்டது. Mandokhel மீது சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என Awan தெரிவித்துள்ளார்.

Related posts

பிரான்சில் வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கு இது இலவசமாக வழங்கப்படும்! அரசு முக்கிய அறிவிப்பு

அம்மு

திடீரென பளிச்சிட்ட வானம்… வானிலிருந்து விழுந்த தீப்பந்து: ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு

அம்மு

சீனா கொடுத்துள்ள பதிலடி! அங்குள்ள அமெரிக்கா தூதரகம் திடீரென மூடல்… இறக்கப்பட்ட கொடி

அம்மு