உலகம்

உலகின் வாழத்தகுந்த முதல் 10 இடங்கள்

கொரோனா பரவலால் உலகின் பல முதன்மை நகரங்கள் களை இழந்துள்ள நிலையில், வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் இரு நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் முதன்மை நகரங்கள் பல கொரோனா பரவலால் பொலிவிழந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட மிக மோசமான நிலையில் உள்ளன, Vienna, Hamburg போன்ற ஐரோப்பிய நகரங்கள்.

ஆனால், உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய நகரங்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

அதேவேளை, சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய இரு நகரங்கள் 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளன. ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இந்த இரு நகரங்கள் மட்டுமே முதல் 10 இடங்களை எட்டியுள்ளன.

நியூசிலாந்தின் Auckland நகரம் உலகின் வாழத்தகுந்த நகரங்கலின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரம் இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரம் மூன்றாவது இடத்திலும் தெரிவாகியுள்ளது.

நியூசிலாந்தின் இன்னொரு நகரமான வெலிங்டன் நான்காவது இடத்தில் தெரிவாகியுள்ளது. மேலும் 2018- 2020 வரை முதன்மை நகரங்களின் பட்டியலில் இருந்த வியன்னா 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

போனமுறை 13வது இடத்தில் இருந்த ஹாம்பர்க் நகரமானது தற்போது 47வது இடத்திற்கு சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

லண்டனில் 3 வயது சிறுவனுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ் தம்பதி: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

அம்மு

பிரித்தானியாவில் பயங்கரம்… ஈவு இரக்கமின்றி மனைவியை கொல்ல முயன்ற கணவன்: அதிரவைக்கும் சம்பவம்

அம்மு

புகையும் தீப்பிழம்பும்: பிரித்தானிய மருத்துவமனையில் சக நோயாளியை உயிருடன் எரித்துக் கொன்ற நபர்

அம்மு