செய்தி

யாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த வயது 26 இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

எனினும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடியில் தற்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த யுவதி மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே மாலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பாட்டு கேட்க ஆசைப்பட்ட யாழ்ப்பாண திருடன்!

அம்மு

கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்!

அம்மு

20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக செய்ய வேண்டியதை சுட்டிக்காட்டும் கல்வி அமைச்சர்

அம்மு