16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பெண் முயற்சியான்மையாளர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மைகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அமெரிக்க அராங்கம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்குகின்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த விடயம் குறித்து இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெண்களினால் நடாத்தப்பட்டு வரும் முயற்சியான்மைகள் அல்லது பெண்களை வலுவூட்டுவதற்கான பொருட்கள் சேவைகளை வழங்கும் முயற்சியான்மைகள் என்பனவற்றுக்கு இவ்வாறு கடனுதவி வழங்கப்பட உள்ளது.

என்.டி.பி வங்கியின் ஊடாக இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.

பெண்கள் தொழில் முயற்சிகளில் உயர் பதவிகளை வகிப்பதனை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.நகரில் கஞ்சா சுருட்டுடன் சிக்கிய இளைஞன்!

SudarSeithy

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திய பின்னரும் பாதிக்கப்படும் ஆபத்து; ஆய்வில் வெளிவந்த தகவல்

SudarSeithy

கோட்டாபயவின் முக்கிய படையதிகாரி வெளியேற்றப்படவுள்ளார்

SudarSeithy

Leave a Comment