கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த வழக்கில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பண்டாரகம பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கொழும்புக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் இருதய நிபுணராக பணியாற்றி வருகிறார்.
குறித்த வழக்குடன் தொடர்புடைய 34 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜூன் 7 ஆம் திகதி முதல் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று வரை கைது செய்யப்பட்ட 32 சந்தேக நபர்களில் அவரது தாயும் உள்ளடங்குவார்.