திருமணம் செய்து கொண்டால் பிரிந்துவிடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி.
இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர்.
இவர்கள் பாலிடெக்னிக் முடித்துள்ள நிலையில், பெற்றோர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தீர்மானம் செய்துள்ளனர்.
இதற்காக வரன் பார்த்து வந்துள்ள நிலையில், சகோதரிகள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை. ஏனெனில் திருமணம் செய்து கொண்டால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்று கவலையில் இருந்துள்ளனர்.
பின்பு தற்கொலை செய்வதற்கு முடிவு எடுத்த இவர்கள், நேற்று முன்தினம் இரவு தனித்தனி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.