யாழ்ப்பாணம், கோவிலம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று காலை நடத்திய சிறப்பு சோதனையில் 98.500 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது டிங்கி படகொன்றும் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 29 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக கொவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி இந்த சோதனை நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மூவரும், கிராஞ்சி, பேசாலை மற்றும் பூனரி பகுதியில் வசிப்வர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை நாட்டை சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 comment