யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களில் 16 பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றது.
அவர்களில், பிறந்த 5 நாட்களான சிசுவும் அடங்கியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 288 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 65 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் 16 சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்கள் தவிர, போதனா வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களேயான சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.