இலங்கைக்கு கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளின் ஊடாக, நாட்டை செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் பட்சத்தில், செப்டம்பர் மாதமளவில் நாட்டை திறக்க முடியும் என அவர் கூறுகின்றார்.
மேலும் நாட்டை உரிய வகையில் திறக்க முடியவில்லை என்றால், பொருளாதாரத்தை முன்னோக்கி கட்டியெழுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.