14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கதவுகள் திறந்தே உள்ளன எவரும் வெளியேறலாம் – மகிந்த கடும் எச்சரிக்கை

மக்களின் நம்பிக்கை எம்மீது உள்ளது. எனவே எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் கதவுகள் திறந்தே உள்ளன என கடும் தொனியில் தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை. அரசியல்கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை.

இன்றைய அரசியலில் உள்ள வேறு பலர் போல இல்லாமல் நாங்கள் உள்ளக ஜனநாயகத்தை பேணுகின்றோம். எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம்,அதற்காகவே மக்கள் எங்களுக்கு பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

Related posts

சீனாவின் வாயை அடைத்த மக்கள் வங்கி!

SudarSeithy

மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்

SudarSeithy

மயானத்துக்கு சென்றவர்களுக்கு குளவிகளால் நேர்ந்த கதி

SudarSeithy

Leave a Comment