அரசாங்கத்தின் அடுத்தகட்ட பயணம் குறித்து விரிவாக ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய திட்டமிட்டுள்ளார்.
அதற்கிணங்க ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இந்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்படவுள்ள இந்த சந்திப்பில், ஆளுங்கட்சியிலுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களளை பகுதி பகுதியாக ஜனாதிபதி அழைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.