இந்தியா

மரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை: மருத்துவர் வெளியிட்ட தகவல்

இந்திய மாநிலம் கேரளாவில் கர்ப்பிணி யானை மரணமடைந்த விவகாரத்தில் உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவர் தற்போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்ப்பிணி யானை மரணத்தில், யானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தற்போது முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

யானை பட்டாசு நிரப்பிய அன்னாசிப் பழம் தின்று படுகாயமடைந்ததாக வெளியான தகவல் தாம் கூறியது அல்ல எனவும்,

பிரேத பரிசோதனையில் யானையின் வயிற்றில் அன்னாசிப் பழம் தின்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடித்ததில் யானையின் தாடை எலும்பு முறிந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை விபத்தில் சிக்கிய பின்னர் பல நாட்களுக்கு பின்னரே, உணவு உட்கொள்ள முடியாமல் சரிந்துள்ளது.

மட்டுமின்றி, எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அதிகமாக குடித்துள்ளது. யானையின் வயிற்றில் இருந்தோ அல்லது, அதன் கழிவுகளில் இருந்தோ அன்னாசிப் பழம் தின்றதற்கான அடையாளம் ஏதும் இல்லை என்றார் மருத்துவர் டேவிட் ஆபிரகாம்.

மேலும், அதே யானையை கடந்த மாதம் 23 ஆம் திகதி பாலக்காடு அருகாமையில் ஒரு கோவிலில் கண்டதாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு வாரம் முன்னரே அந்த யானை விபத்தில் சிக்கியிருந்திருக்கலாம் எனவும், அதன் வாயில் காயம் காரணமாக புழுக்கள் மொய்த்த நிலையில் காணப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் விபத்து நடந்த பகுதி எது என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்! வெளியான வீடியோ

அம்மு

நாட்டை உலுக்கிய 8 பொலிசாரை கொன்ற பிரபல ரவுடி கைது! வெளியான வீடியோ

அம்மு

கணவர் இறந்துசரிவதை வீடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாயார்: பலர் உதவியால் கேரளம் திரும்பினார்

அம்மு