செய்தி

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடாத்தப்படும்: மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்கு முன்னதாக நாட்டில் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து சில ஊடகங்களில் பல்வேறு திகதிகள் ஊகங்களாக வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நடாத்தப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழு அவ்வாறு எவ்வித தீர்மானத்தை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றில், தேர்தல் ஆணைக்குழு அளித்த உறுதிமொழிக்கு அமைய ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடாத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்பதனை மட்டுமே தற்போதைக்கு கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நேற்று அழையா விருந்தாளியாக நுழைந்த சுமந்திரன்

அம்மு

இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!

அம்மு

இறுதியாக கொரோனாவுக்கு சிக்கியவர்களின் விபரம்!

அம்மு