இந்தியா

திருமணமான 5 நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமணத்தம்பதி! ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து கடந்த 31ஆம் திகதி இரவு தனது அறைக்கு தனியாக ஆர்த்தி தூங்க சென்றார்.

அப்போது மஞ்சித்தும் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.

காலையில் வெகுநேரம் ஆகியும் ஆர்த்தி அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார், அப்போது அவர்கள் வீட்டருகில் உள்ள ரயில்வே தண்டவளத்தில் மஞ்சித் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

விசாரணையில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று இருவரின் சடலமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை வரவழைத்து கொலை செய்த மனைவி! விசாரணையில் திடுக் தகவல்

அம்மு

பெண்கேட்டுத் தரவில்லை! வீட்டில் வந்து பெண்ணைத் தூக்கிய 5 பேர்… உடைந்த காலுடன் மறைத்து வைத்த கொடுமை

அம்மு

பெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார்? 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான புதிய தகவல்

அம்மு