15.9 C
Manchester
17 September 2021
Image default
விளையாட்டு

இங்கிலாந்துடன் ஒரே ஒரு விக்கெட் எடுத்தா போதும்… பும்ரா படைக்கவிருக்கும் மிகப் பெரும் சாதனை!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இன்னும் ஒரே ஒரு விக்கெட் எடுத்தால் மிகப் பெரிய் சாதனைக்கு சொந்தக்காரராக மாறுவார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்களும் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ட்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இந்த போட்டியில் பும்ரா இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த வீரர் என்ற கபில்தேவின் சாதனையை முறியடிப்பார்.

தற்போது 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பும்ரா 99 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கபில்தேவ் இந்த சாதனையை 25-வது போட்டியில் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து மிகப் பெரிய சாதனை ஒன்றை பும்ரா இப்போட்டியில் படைக்க காத்திருக்கிறார்.

இந்திய அணி சார்பாக விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் கபில்தேவ்விடம் இருந்து பறிக்க இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.

நிச்சயம் இரண்டாம் நாளான இன்று அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று நம்பலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24 ஆவது போட்டியை விளையாடிவரும் பும்ரா 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய கிரிக்கெட் வந்ததன் மூலம்… இலங்கைக்கு எத்தனை கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா? உறுதியான தகவல்

SudarSeithy

ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை சிக்சரே விளாசாத வீரர்களை தெரியுமா? இலங்கை, இந்திய வீரர் கூட இருக்காங்க

SudarSeithy

இந்தியாவுக்கு செம வாய்ப்பு… அடுத்த டெஸ்ட் போட்டி மைதானம் இப்படி தான் இருக்க போகுதாம்! கசிந்த தகவல்

SudarSeithy