செய்தி

வரலாற்று அறிவின்றி கருத்துரைக்கும் ஞானசாரர்! இலங்கை முழுதுமே தமிழர்களின் பூமி

பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார்.

அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல. இலங்கை முழுவதும் பௌத்த பூமியாகும். வடகிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரரின் குறித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் ரவிகரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிப்பாக இலங்கைக்குப் பௌத்தம் வருவதற்கு முன்னரே, இலங்கை முழுவதும் சைவம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல, இலங்கை முழுவதுமே தமிழர்களின் பூர்வீகத் தாயகமாகும். தமிழர்கள் வடக்கு, கிழக்கை மாத்திரமே தமது பூர்வீகத் தாயகமாக உரிமை கோருவதென்பது தமிழர்களின் பெருந்தன்மையாகும். இதனை உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மொழி இங்கு பிறப்பதற்கு முன்னரே தமிழ்மொழி பிறந்துவிட்டது. பன்நெடுங் காலமாக தமிழ் மொழி பேசப்பட்டும் வந்திருக்கின்றது.

சிங்களவர்கள் இங்கு ஒரு இனமாக கட்டமைப்பதற்கு முன்னரே, ஏன்? சிங்களவர்களின் மூதாதையர்கள் இந்தத் தீவிற்கு வருவதற்கு முன்னரே, இங்கு தமிழர்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றாரகள் என்பது வரலாற்று ரீதியாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் அவர் வடகிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது தொடர்பிலும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் படையினர் நிலைகொண்டிருப்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் சரியான வரலாற்று அறிவில்லாமல் கருத்துக்களை வெளிவிடுவதனை ஞானசாரதேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்திக்கொள்வது நன்றாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்கள்? சி.சிவமோகன்

அம்மு

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் இலங்கையிலிருந்து சென்ற முதல் பயணிகள் விமானம்!

அம்மு

தந்தையின் சடலத்தை செல்போனில் பார்த்த மகன் மாரடைப்பால் மரணம்! சாலையிலேயே பிரிந்த உயிர்

அம்மு