15.9 C
Manchester
17 September 2021
Image default
தொழில்நுட்பம்

Whatsapp-ல் நீங்கள் உங்களுக்கே சாட் செய்துகொள்வது எப்படி? சூப்பரான ட்ரிக்ஸ்

வாட்ஸ் அப்பை நீங்கள் ஒரு பெர்சனல் டைரியாகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முக்கிய குறிப்புகள், பட்டியல்கள், புகைப்படங்கள் அல்லது ஏதேனும் முக்கிய பைல்கள் போன்றவற்றை நீங்கள் உங்களுக்கே அனுப்பிக்கொள்ள வாட்ஸ்அப்பில் ஒரு எளிய ட்ரிக் உள்ளது.

வாட்ஸ்அப்பில் நீங்கள் உங்களுக்கே சாட் செய்துகொள்ளும் வழிமுறை

இந்த முறை மிகவும் எளிதானது. முதலில், உங்கள் மொபைலில் இருந்து கூகுள் க்ரோம் போன்ற ஏதேனும் ஒரு வெப் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதில் wa.me// என்று டைப் செய்த பிறகு உங்கள் தொலைபேசி எண்ணை நாட்டின் குறியீட்டு எண்ணுடன் சேர்த்து உள்ளிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் வாட்ஸ்அப் எண் 9999119999 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பிரவுசரில் wa.me//+919999119999 என்று டைப் செய்ய வேண்டும்.

இப்போது அதில் கன்டின்யூ சாட் என்ற விருப்பம் தோன்றும். அதை டாப் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப்பின் சாட் பக்கத்திற்கு செல்வீர்கள். அதில் முதல் சாட்டாக உங்கள் தொலைபேசி எண் இருக்கும்.

அதில் நீங்கள் பிற சாட்களை போலவே செய்தி, முக்கிய குறிப்புக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பைல்களை அனுப்பிக்கொள்ளலாம்.

நீங்கள் விரும்பினால், இந்த சாட்டை உங்கள் தொலைபேசியில் பின் (Pin) செய்து கொள்ளலாம். இதன் மூலம், நீங்கள் எதையாவது எடுக்க வேண்டிய நேரத்தில் உங்கள் சொந்த சாட் பக்கத்தை திறந்து பார்த்துக் கொள்ளலாம்.

Related posts

ரகசிய Cameraவை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு உங்கள் கையில் உள்ள Smartphone போதுமே

SudarSeithy

அசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்

SudarSeithy

சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கிய வாட்ஸ்அப்

SudarSeithy