தமிழகத்தில் திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில், கணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(27). மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் இவருக்கு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த நாளில் இருந்தே இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்க்சப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜேந்திரன் சமீப நாட்களாக மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி வரை மனைவியிடம் ராஜேந்திரன் பேசிக் கொண்டிருந்த போது, மீண்டும் இருவருக்கிடையே தாம்பத்திய சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இர்ருவரும் தனித்தனியாக சென்று உறங்கியுள்ளனர். அப்போது மிகுந்த வேதனையில் இருந்த ராஜேந்திரன், இரவு 1 மணிக்கு மேல், படுக்கை அறைக்குச் சென்று வீட்டு சீலிங்கில் உள்ள ஊக்கில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலை வழக்கம் போல் 7 மணிக்கு எழுந்து மனைவிக்கு பார்க்கும் போது, அறையில் கணவன் தூக்கில் தொங்கிக் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார், உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது அங்கு நடத்தப்பட்ட சோதனையில், ராஜேந்திரன் தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் அவர் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளதால், தொடர் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.