ஆன்மீகம்

எந்த திசையில் தலைவைத்து படுக்க கூடாது தெரியுமா…?

புராண ரீதியாக பார்த்தால், வடக்கு திசை என்பது குபேரனுக்குரிய திசையாகும். எனவே, நாம் வடக்குப் பக்கமாக தலை வைத்து படுப்பது குபேரனை அவமதிப்பதுபோல் ஆகும். அதனால், நமக்கு குபேரனின் அருள் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். இதனால்தான், ‘தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது’ என்ற பழமொழி ஏற்பட்டது.

மற்றொரு வகையில் பார்த்தால், நாம் வடக்கில் தலை வைத்துப் படுத்தால், நம் கால்கள் தெற்கே இருக்கும். தென் திசை யமனுக்கு உரிய திசை என்பதால், யமனை அவமதிப்பதுபோல் ஆகும். நமக்கு எதற்கு யமனின் பொல்லாப்பு என்றுதான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

இப்படி நம் முன்னோர்கள் ஆன்மிகத்தின் அடிப்படையில் நமக்குக் கூறினாலும், இதன் பின்னணியில் அமைந்திருக்கும் அறிவியல் உண்மையையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர். ஆனால், அறிவியல் பின்னணியில் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எண்ணியே ஆன்மிகக் காரணம் சொல்லினர். வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியல்பூர்வமான காரணம் பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம்.

வடக்கு திசையில்தான் மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால்தான் திசை காட்டும் கருவியின் முள்முனை வடக்கு நோக்கியே காட்டும். மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கும்போது, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.

காந்த சக்தியை பற்றிய அறிவியல் வளராத காலத்திலேயே நம் பெரியவர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று அழகாக பதிவு செய்து இருக்கிறார்கள். தெற்கு, கிழக்கு பகுதிகளில் சரியான அளவு ஈர்ப்பு சக்தி உள்ளதால் தூங்கி எழும்போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமலும் எழுந்திருக்க முடிகிறது.

வடக்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் உருவாகி மூளையை மந்தமாக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் வடக்கில் தலைவைத்து படுத்தால் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். விரக்தி நிலையால் எரிச்சலும் உண்டாகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆன்மீகமும், அற்வியலும் கலந்து பெரியோர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறது. அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொன்னதில்லை.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன?

அம்மு

மூன்று வித குணம்

அம்மு

தீபம் ஏற்றும் விளக்கின் தன்மைகளும் அதன் பலன்களும்…!!

அம்மு