வாழ்க்கைமுறை

பழங்களும் அதன் அற்புத பயன்களும்

முந்திரிகைப் பழம் – கொடி முந்திரிகைப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வை துலங்கும்.

தூதுளம் பழம் – தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

பலாப்பழம் – பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு நாட்கள் சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். ஆனால் அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

இலந்தைப் பழம் – உணவு உட்கொண்ட பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு மற்றும் பித்தம் விலகும்.

உலர்ந்த திராட்சை – உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர தாது விருத்தி பெறும். மலச்சிக்கல் விலகும்.

பப்பாளிப் பழம் – யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால்வாசி பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

வாழைப்பழம் – மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்டது வாழைப்பழம். அதிலும் செவ்வாழை, மலைவாழை ஆகியவை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு அதிகரிக்கும்.

வில்வம் பழம் – இதனை பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும். சிறுநீரகம் நன்கு செயல்படும். வயிற்றுப் புண் ஆறும்.

அரசம் பழம் – விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பூண்டு சாப்பிட்டால் பக்கவிளைவுகளும் உண்டு!…

அம்மு

குழந்தை பெற்றுக்கொள்ள இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள்! மதங்கள் தாண்டிய வழக்கம்…

அம்மு

உடல் ஆரோக்கியத்துக்கு பயன்தரும் சில இயற்கை குறிப்புகள் இதோ!

அம்மு