வாழ்க்கைமுறை

தேங்காய்ப்பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா!

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும் தேங்காய் பூவின் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

தேக்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு கூடும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை பெற தேங்காய் பூ உதவும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு மன அமைதி கிடைக்கும். இதிலுள்ள மினரல் வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலை குணமாக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தாலும் தேங்காய் பூவினை சாப்பிடலாம்.

இதயத்தில் படியும் கொழுப்பை தேங்காய் பூ கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. மற்றும் இன்சிலுன் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்த மற்றும் தைராய்டு பாதிப்பை குணப்படுத்த முடியும்.

உடல் எடை குறையும்

தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. வலர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும் தன்மை தேங்காய்ப் பூவில் உள்ளது.

தேங்காய் பூ சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறுநீரக தொற்று நோய்களை குணப்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தேங்காய் பூவில் முதுமையை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதால் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவற்றைத் தடுக்கும். சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளையும் தடுக்கிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்

அம்மு

உடல் எடை, கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பழம் போதும்!

அம்மு

தூங்குவதற்கு முன் வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

அம்மு