வாழ்க்கைமுறை

மீன் தோல் வைத்து தீ காயத்திற்கு சிகிச்சை! வியக்க வைக்கும் மருத்துவ முறை

தீக்காயம் அடைந்தவர்களுக்கு திலாப்பியா (Tilapia ) என்கிற மீனின் தோலை வைத்து பிரேசில், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

திலாப்பியா (Tilapia) என்ற மீன் வகை ஒன்று உள்ளது. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. நன்னீரில் வளரும் மீன் இனம் இது. தீக்காயங்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காயங்கள் விரைந்து ஆறுவதற்கு, இந்த மீனின் தோல் மிகுந்த பயனளிக்கிறதாக சொல்லப்படுகின்றது.

பிரேசிலில் மருத்துவர்கள் இம்மீனின் தோலை வெட்டி எடுத்து, சுத்தம் செய்து, தீக்காயங்களுக்கு கட்டுப்போட பயன்படுத்துகின்றனர்.

இம்மீனின் தோல், காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. இந்த சிகிச்சை முறை பரிசோதனையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறை குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை எடுத்துக்கொள்கின்றனர்.

தொடர்ந்து இன்னும் நல்ல பலனைக் கொடுப்பதாக இந்த சிகிச்சை எடுத்து கொண்டு குணமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சிகிச்சை முறையை, மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், மிருகங்களுக்கும் பிரேசில் நாட்டு மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த மீனின் தோலை, பதப்படுத்தி இது போன்ற கவரில் வைத்து பயன்படுத்துகிறார்கள்.

மீன் தோலை வைத்து, சிகிச்சை அளிப்பதால், தீ காயம் ஏற்பட்டவருக்கு எரிச்சல் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலான அவஸ்தைகள் இருக்கும் என கூறப்படுகிறது.

மீன்களில் இருந்து பெரிய அளவில் வெட்டி எடுக்கப்படும் இது போன்ற தோல்களை தான் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஏரி, குளங்களிலும் காணமுடியும். ஜிலேபி மீன் போல் இந்த மீன் பார்ப்பதற்கு இருக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

காதுகளில் ஏற்படும் பருக்களை எப்படி அகற்றலாம்? இதோ சில எளிய முறைகள்

அம்மு

தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நன்மைகள் ஏராளம்!!

அம்மு

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் உள்ளனரா? கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை

அம்மு