19.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

கல்கிசை சிறுமி விவகாரம்; கடற்படை வைத்தியர் பணி இடைநிறுத்தம்!

கல்கிசை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருதய சத்திர சிகிச்சை நிபுணரான கடற்படை அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணையின் முதல் நடவடிக்கையாக அவர் பணியிலிருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்த லெப்டினன்ட் கமாண்டர் தர அதிகாரி ஆவார்.

மேற்படி வைத்திய நிபுணர், தலா 15 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி, இரு சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்திருந்தது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரண பொதி

SudarSeithy

கொரோனா தொற்றை கண்டறிய புதிய பரிசோதனைக் கருவி!

SudarSeithy

அவிஷ்கவின் பந்தால் வாய்ப்பை இழந்தார் டெம்பா பவுமா!

SudarSeithy

Leave a Comment