நாட்டில் நேற்று (06) கொரோனா தொற்று காரணமாக மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களில் ஆண் ஒருவரும். பெண் ஒருவரும், 30 – 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 15 ஆண்களும், 14 பெண்களுமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலைியில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3351 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.