15.9 C
Manchester
17 September 2021
Image default
வாழ்க்கை முறை

இரவில் தெரிந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. உஷாரா இருங்க!

எந்த உணவுகளை எப்போ சாப்பிட வேண்டும் குறித்து தெரிந்திருத்தல் வேண்டும். கண்ட நேரத்தில் பொறித்த, வறுத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடுமாம்.

இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக காலை மற்றும் இரவு உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

சில உணவுகளை இரவு நேரத்தில் தொடவே கூடாது. மீறினால் உடல் ஆரோக்கியம் குறைய வாய்ப்பு உள்ளது.

  • பால் குடிப்பது நல்லது தான். ஆனால் இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.
  • இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது.
  • பூசணி, கடலை, சுரக்காய், பாவைக்காய், கோவைக்காய், தர்பூசணி, செளசெள போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்று.
  • சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் தூக்கம் பாதிக்கப்படும்.  இரவு 7 அல்லது 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். இரவு அதிக நேரம் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். காலையில் பசி எடுக்காது.

  • இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில் அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும் ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.

Related posts

தோசை சப்பாத்திக்கு ஏற்ற சுவையான எண்ணெய் மாங்காய் தொக்கு.. செய்வது எப்படி?

SudarSeithy

பிரபல தமிழ்பட நடிகை மோகினியின் அழகு ரகசியம் என்ன தெரியுமா?

SudarSeithy

பூசணி விதை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக இவ்வளவு நன்மைகளை தருகிறதா..?

SudarSeithy