வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களை தனிமைப்படுத்தல் இலவசமாக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இதுனில், வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக கூறுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கொவிட் சட்டத்தின் பிரகாரம் தனிமைப்படுவதற்காக ஹோட்டல்கள் மற்றும் வேறு தங்குமிட நிலையங்களாக 14 மத்திய நிலையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனதாகவும் அவர் கூறினார்.