இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்தவீரர் அஞ்சலோ மத்யூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மத்யூஸ் (34) இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இளம் அணியை கட்டியெழுப்புவதென தேர்வாளர்கள் முடிவு செய்ததை தொடர்ந்து, அஞ்சலோ மத்யூஸ் வரையறுக்கப்பட்ட ஓவர் ஆட்டங்களுக்கான அணியில் இணைக்கப்படவில்லை.
புதிய ஒப்பந்த முறைமை தொடர்பாக மத்யூஸ் மற்றும் பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், நேற்றிரவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment