துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
துபாயில் உள்ள Jebel Ali துறைமுகத்திலே இந்த சம்பவம் நடந்துள்ளது. வெப்பமான கோடை மாதங்களில் அதிக வெப்பநிலை காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
எரியக்கூடிய பொருட்கள் இருந்த கண்டெயினர்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம், இது வழக்கமாக ஏற்படும் விபத்து தான் என்று DMO இயக்குநர் ஜெனரல் Mona Al Marri தெரிவித்தார்.
இந்த வெடி சத்தம் Jebel Ali துறைமுகத்திலிருந்து சுமார் 15 முதல் 22 கி.மீ தூரம் வரை கேட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
JUST IN – Massive explosion in #Dubai at Jebel Ali Port.pic.twitter.com/ZzRLj8vyBj
— Disclose.tv 🚨 (@disclosetv) July 7, 2021
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்போ காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.