15.9 C
Manchester
17 September 2021
Image default
இலங்கை

அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா; தொடரும் அமைச்சுக்கள்!

சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அவரது இராஜினாமா கடிதத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற்சாலை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை எனவும் கூறப்படுகின்றது.

எனினும் லொஹான் ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன் சிறைச்சாலைகளில் தன்னால் இழைக்கப்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பதவி விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Gallery

Related posts

இந்திய மீனவர்களால் யாழ் மீனவரின் பரிதாப நிலை! இப்படி ஒரு முடிவு

SudarSeithy

யாழில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

SudarSeithy

யாழில் விபத்தில் இறந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம்; குடும்பத்தினர் முறைப்பாடு!

SudarSeithy