15.9 C
Manchester
17 September 2021
Image default
உலகம்

இருட்டு அறையில் தனியாக 13 பேய் படங்களை பார்த்தால் பரிசு! பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு

இந்த 13 பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பதற்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம் ‘ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வு’ என ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து 10 நாட்களில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.

அப்போது பார்ப்பவர்களின் இதய துடிப்பு ஃபிட்பிட்டைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுமாம். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்து முடிக்க வேண்டும்.

இதுகுறித்து கூறிய ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம், ‘குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்தை விட, அதிக பட்ஜெட் எடுக்கப்படும் திகில் திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை ஏற்படுத்துகிறதா, இல்லையா என்பதை அறியவே இதுபோன்ற ஒரு போட்டியை நாங்கள் அறிவித்துள்ளோம்.

இந்த போட்டிகளின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார். அதோடு இந்த போட்டிக்கான அனைத்து திரைப்படங்களின் வாடகை செலவுகளையும் ஈடுசெய்ய FitBit நிறுவனம் $ 50 தொகையை பங்கேற்பவர்களுக்கு வழங்கும்.

ஹாரர் ஃபெஸ்ட் பார்க்கும் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவை, Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle,

இந்த படங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தகுதியையும் ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Related posts

புதிய அரசை அமைப்பதில் கைகலப்பு; தலிபான் தலைவருக்கு நேர்ந்த கதி!

SudarSeithy

சீனாவில் திடீரென இழுத்து மூடப்பட்ட மிகப்பெரிய துறைமுகம்!

SudarSeithy

தடுப்பூசி மருந்துக்கு பதிலாக உவர் நீர் – ஜேர்மனியில் வெடித்தது சர்ச்சை

SudarSeithy