15.9 C
Manchester
17 September 2021
Image default
வாழ்க்கை முறை

இயற்கை ஆக்ஸிஜனை பெற்று உடல் நோய்களை விரட்டும் செடி… வீட்டு முன் வைச்சு பாருங்க…..!

ஆடா தொடை இலையில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இவை ஆடா தொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

மேலும், தலைவலி, காய்ச்சல் என்றால் அனைவரும் மருந்து மாத்திரைகளை தேடி ஓடுகின்றன. ஆனால் முன்னொரு காலத்தில் இயற்கை மருந்து அதிக அளவில் காணப்பட்டது. அதை அனைவரும் தற்போது மறந்து விடுகிறோம். உடலில் பல பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதுபோல நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆடாதொடை மூலிகையை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் ஆடாதொடை பொடி கால் டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாகும். ரத்த நாளத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். ஆடாதொடை செடி ஆக்சிஜன்களை அதிக அளவில் தரவல்லது.இதனால் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதை ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.

ஆடா தொடை இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.

Related posts

இரவில் தெரிந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. உஷாரா இருங்க!

SudarSeithy

சர்க்கரை நோய்க்கு சவால் விடும் கருஞ்சீரக மருந்து! ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்.. விரைவில் பலன் தரும்

SudarSeithy

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? இந்த பொடி சாப்பிட்டு வாங்க. சீக்கிரம் பலன் தெரியும்

SudarSeithy