15.9 C
Manchester
17 September 2021
Image default
உலகம்

தலைமுடியை தங்க சங்கலியாக பொறுத்தி கொண்ட வினோத மனிதர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தலை முடியை பாதுக்காப்பது என்பது இன்றைய நவீன உலகத்தில் பெரிய விஷயமாகவே உள்ளது,. அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில், 23 வயதான மெக்சிகன் ராப் பாடகர் (Mexican Rapper Dan Sur) தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்தியிருக்கிறார். அவர், தலைமுடியாக தங்க இழைகள் அல்ல, தங்கச் சங்கிலியை பொருத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும், இந்த ராப் பாடகர், ஏப்ரல் மாதத்தில் வினோதமான அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டார். “தங்க முடியை” பொருத்திக் கொண்ட ராப் பாடகர் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டார்.

தலைமுடியையே தங்க சங்கிலி பின்னலாக மாற்றிய முதல் மனிதர் இவர் தான். தலைமுடியை மட்டுமின்றி பற்களையும் தங்கமாக மாற்றிக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய அவர், மற்றவர்களைப் போல தனது தலைமுடிக்கு சாயம் பூச விரும்பவில்லை என்றும், வித்தியாசமாக எதாவது செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஒரே நாளில் நடந்த கொடூர வேட்டை – தீவு முழுவதும் இரத்த வெள்ளம்!

SudarSeithy

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கடைசி இடத்தைப் பிடித்த கனேடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு

SudarSeithy

தலிபான்களிடம் சரணடைந்தது அமெரிக்கா – ட்ரம்ப் கடும் சீற்றம்

SudarSeithy