12 C
Manchester
20 October 2021
Image default
உலகம்

ஒரே நாளில் நடந்த கொடூர வேட்டை – தீவு முழுவதும் இரத்த வெள்ளம்!

நோர்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாரோ தீவுகளில் ஒரே நாளில் 1400 டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதுடன், தீவு முழுவதும் செந்நிறமாக காட்சியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நோர்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாரோ தீவுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை வேட்டையாடுகின்றனர்.

கிரைண்ட் அழைக்கப்படும் இந்த வேட்டையில் திமிங்கலங்களும் டொல்பின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது. அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றனர் பாரோ தீவின் வேட்டைக்காரர்கள். இந்த வேட்டையின்போது ஒரே நாளில் 1400 டொல்பின்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஐஸ்ட்ராயில் உள்ள ஸ்கலாபோத்னர் கடற்கரையில் ஆழமற்ற பகுதியில் டொல்பின்களை கொண்டு வந்து கத்திகளால் வெட்டி கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதி தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து செந்நிறமாக காட்சியளித்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. இந்த அளவிற்கு ஏராளமான டொல்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் கொடுமையானது என்றும் இந்த வேட்டை தேவையற்றது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை, திமிங்கலங்களை வேட்டையாடுவது என்பது, இயற்கையிலிருந்து உணவு சேகரிப்பதற்கான நிலையான வழி மற்றும் தங்களின் கலாச்சார அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Related posts

தலிபான்கள் தொடர்பில் ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் சம்பவங்கள்

SudarSeithy

பேத்தியின் திருமணத்தை கண்டதுமே இறந்த பாட்டி- நெஞ்சை உருக்கும் சம்பவம்!

SudarSeithy

4 கார், ஒரு ஹெலிகொப்டரில் தங்கத்தையும் பணத்தையும் நிரப்பிக்கொண்டு தப்பி ஓடிய ஜனாதிபதி! ரஷ்யா பரபரப்பு தகவல்

SudarSeithy