12 C
Manchester
20 October 2021
Image default
உலகம்

சீனாவை அடக்குவதற்கு ஒன்று சேர்ந்த உலகின் சக்திவாய்ந்த 3 நாடுகள்

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன. ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது. AUKUS இன் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன் ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்ன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் இருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு இரு முக்கிய நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவது நட்பு நாடான பிரான்ஸ். நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த நாடு ஆஸ்திரேலியாவுடன் டீசலில் இயங்கும் நீர்மூழ்கியை கட்டுவது தொடர்பாக உடன்பாடு செய்திருந்தது. இப்போது இந்த உடன்பாடு முறிக்கப்படுகிறது. இரண்டாவது நாடு சீனா.

இந்த உடன்பாடு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறி வந்தாலும், இன்னொரு புறம், இந்தப் பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதும், சட்டத்தின் அடிப்படையிலான அமைதி நிலையை ஆதரிப்பதும் இந்த உடன்பாட்டின் நோக்கம் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.

Related posts

பிறந்த குழந்தையின் முகம் பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளாத இளம் வயது தாயார்: நெஞ்சைப் பிசையும் காரணம்

SudarSeithy

தலிபான்கள் தொடர்பில் ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் சம்பவங்கள்

SudarSeithy

50 மில்லியன் கேட்ட தாலிபான்கள்! 8 மாதங்களுக்கு பின்னர் தப்பி ஓடி வந்த சுவிஸ் தம்பதியின் நெஞ்சை உலுக்கும் நினைவுகள்

SudarSeithy