முல்லைத்தீவு, கல்லப்பாடு பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் , குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இரு மூன்று சைக்கிள்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதாவர்கள் 20 மற்றும் 24 வயதுடைகளுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் நிதி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டிலிருந்து வந்த கட்டளையின் பிரகாரமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.