வாழ்க்கைமுறை

எப்போதும் உடல் சோர்வாக இருப்பதோடு பகலிலேயே தூக்கம் வருதா? இதை மட்டும் செஞ்சா சுறுசுறுப்பா துள்ளி குதிக்கலாம்

சிலருக்கு எவ்வளவு தூங்கினாலும் களைப்பாக இருப்பதோடு பட்டப்பகலிலேயே கண்ணைக் கட்டும்.

இப்படி எப்போதும் சோர்வாக இருப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் குறைகிறது. எதிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.

சுலபமான 5 வழிகளைக் கடைப்பிடித்தால் நீங்களும் சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.
1) காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

காலையில் நாம் சாப்பிடும் உணவு அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. வேலைக்குப் புறப்படும் அவசரத்தில் சிலர் எதோ ஒப்புக்காக ஒரு துண்டு ரொட்டியைச் சாப்பிடுவது உண்டு. முழுமையான சத்துக்களைக் கொண்ட தானியங்கள், பழங்கள், முட்டைகள், நல்ல கொழுப்பு வகைகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.

2) மற்றவர்களுடன் உரையாடுவதில் கவனம் செலுத்துங்கள்

மற்றவர்களுடன் எப்போதும் கலகலப்பாகப் பழகினால் உடல் சோர்வு நமக்குத் தெரியாது. ஆனால் சிலருக்குப் புதுமுகங்களுடன் பழகுவது பதற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றால், பிறருடன் பழகுவதில் கவனம் செலுத்துங்கள். நாளடைவில் பதற்றம் ஓடிவிடும், உங்களுக்கும் சோர்வு குறைந்துவிடும்

3) காலையில் உங்கள் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுங்கள்

வேலைக்குச் செல்வதற்கு முன் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் சுறுசுறுப்பாக இருக்க வகைசெய்யும். ஆனால் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மூளைக்கு வேலை செய்யலாம். ஓவியம் வரைவது, எழுதுவது ஆகியவற்றைச் செய்வது உடலைத் தெம்பாக வைத்திருக்கும்.

4) தண்ணீர் அருந்துங்கள்

உடலின் நீர் அளவு குறைந்தால் உடல் சோர்வடையும். பலர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் நொறுக்குத் தீனிகளை உண்கிறார்கள். ஆனால், ஒரு நாளில் எட்டுக் குவளைகள் தண்ணீர் குடிப்பது அவசியம்.

5) தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள்

இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, திறன்பேசியைப் பயன்படுத்துவது போன்றவை நமது தூக்கத்தைப் பாதிக்கும். அதனால் இரவில் அவற்றை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு குறைந்தது எழு மணி நேரம் தூங்குவது முக்கியமாகும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது எச்சரிக்கையா இருங்க! இந்த நோய்கள் எல்லாம் உங்களை தாக்க வாய்ப்பிருக்கு

அம்மு

வயிற்றுப் புண்ணை சீக்கிரம் குணப்படுத்த இதை சாப்பிடுங்கள்

அம்மு

உங்கள் இதயத்தில் ஓட்டை உள்ளதை வெளிக்காட்டும் ஆபத்தான அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா?

அம்மு