தான் அமைச்சராக இல்லாமல் பொதுமக்களின் உதவியாளராக இருந்து மக்களிற்கு சேவை செய்யத் தயாராக உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று புதிய நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் என்டைய சொந்த முன்னுரிமைகள், ஒரு தந்தையைப் போன்ற சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆதரவின் கீழ் பணியாற்றினாலும், பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஆதரவு தேவையென்றும் அவர் கூறினார்.
அதோடு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற அனைத்து பொது அதிகாரிகளும் நாட்டின் எதிர்காலத்திற்காக பணியாற்ற வேண்டும் என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.