16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழ் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் இப்படிப்பட்டவரா?

சிறு வேலை நிமிர்த்தம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மாலைப்பொழுதில் யாழ் இந்து மகளீர் கல்லூரி செல்லும் வழியில் தண்டவாளக்கடவையில் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஒருவர் களைத்து நிலை தடுமாறி விழுந்துவிட்டார்.

“அவர் பழைய தகரங்களை எடுத்து விற்கும் ஒருவராகவே நினைக்கிறேன். காரணம் அவர் மிதிவண்டியின் பின் இருக்கையில் பழைய தகரங்களை கட்டி வந்தமை” அவரை பார்த்ததும் அவருக்கு உதவுவோம் என நான் நினைப்பதற்கு முதலே பிக்கப்பில் வந்த ஒருவர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக கிழே இறங்கி வந்தார்.

வநதவர் உடனடியாக கீழே விழுந்தவரை தூக்கி அவரது பழையதகரங்கள் அனைத்தையும் பொறுக்கி எடுத்து அவரை நிலைப்படுத்தி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் . இங்கே பலர் வினாவ முடியும் இங்கே ஏன் நீங்கள் உதவிசெய்யாது புகைப்படம் எடுத்தீர்கள் என்று.

அதற்கான காரணம் யாதெனில் “வழமைக்கு மாறக பிக்கப்பில் வந்தவர் நிலை தடுமாறி விழுந்தவருக்கு இறங்கி வந்து உதவுகிறாரே அதுவும் இவ் corona சூழலில் யாராக இருக்கும் என பார்த்தால் ஏற்கனவே எனக்கு பழக்கப்பட்ட முகம் , அவர் யாழ் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆவார். எனக்கு வியப்பாக இருந்தது.

ஆனாலும் இவரை போல் மற்றவர்களும் முன்னுதாரணமாக செயற்படனும் என்பதற்காகவே இப் புகைப்படத்தை எடுத்தேன். ஆனால் நம் சமூகத்தில் இப்படி பட்ட நல்லவர்களை தான் பலர் விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றார்கள். நம் முன்னோர்கள் சொல்லிவைத்தது போல காய்க்கிற மரத்துக்கு தான் கல்லெறி விழும். அது இவரது விடயத்தில் உண்மை தான் போல…

முகநூல் பதிவில் இருந்து….

Related posts

வடக்கில் வாழும் தமிழர்கள் தொடர்பில் சிங்களே அமைப்பு கரிசனை

SudarSeithy

இலங்கை இளைஞர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

SudarSeithy

ராஜபக்சவினரின் பணத்துடன் இலங்கை வந்துள்ள வர்த்தகர்கள் – ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் விலை 10 கோடி

SudarSeithy

Leave a Comment