வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கின் பங்குத்தந்தை அருட்பணி M.ஜெயபாலன் அடிகளார் வவுனியா இறம்பைக்குள பங்கில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பான முறையிலே பணியாற்றி வந்தவர்.
இக்காலப்பகுதியில் பங்குத்தந்தை அருட்பணி M.ஜெயபாலன் அடிகளார் , மக்களை சிதறவிடாமல் ஆயன் தன் மந்தைகளை எவ்வாறு அழைத்து செல்லுகின்றதோ அதே போல பங்கு மக்களை மிகவும் நேசித்து ஒற்றுமையுடன் வழிநடத்தி வந்தவராவார்.
இந்த நிலையில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு மாற்றலாகி செல்லும் அருட்தந்தை M.ஜெயபாலன் அடிகளாருக்கு அவரது சேவைகளுக்காக பங்கு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தற்போது அருட்தந்தை M.ஜெயபாலன் அடிகளார் வங்காலை புனித ஆனாள் ஆலயத்தின் புதிய பங்கு குருவாக மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் ஆண்டகை அவர்களினால் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.